- ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் மாவட்டம் அழிஞ்சிவாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திறந்து வைத்தார். கொரோனா பாதிப்பால் மாணவர்களின் கற்றலில் ஏற்பட்டுள்ள இடைவெளியைக் குறைக்கும் விதமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் அடிப்டை கணிதத் திறனுடன், பிழையின்றி எழுதி படிப்பதை உறுதி செய்யும் விதமாக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் முடியும் வரை மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்கக் கூடாது என ஜல்சக்தி அமைச்சகத்துக்கு அறிவுறுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
- தமிழகத்தில் 18 வயதை கடந்தவர்களில் 94.31% பேருக்கு கொரோனாவுக்கு எதிரான முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் ரூ.10,790 கோடியில் மின் விநியோக கட்டமைப்பு வசதியை செய்துகொடுக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
- தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக செயல்பட்டு வந்த திரு.ஏ.உதயன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தமிழகத்தில் புதிய மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக எம்.ஜெயந்தி (வனத்துறை சிறப்புச் செயலர்) நியமிக்கப்பட்டுள்ளார்.
- ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் ஆலத்தியூர் ஆலைக்கு ‘ஆற்றல் திறன்மிக்க அலகு’ என்ற விருது ஐதராபாத் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
- அரசு வேலைவாய்ப்பில் 20 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத் திருத்தத்துக்கு எதிரான வழக்கினை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் உதவி சிறை அதிகாரியாக பணிபுரிந்து வரும் ஷாலினி என்பவர் இந்த வழக்கை தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மேற்குவங்கத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வர் மம்தா பானர்ஜியை நியமிக்க வகை செய்யும் மசோதா, அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
- 27 ஆண்டு சேவைக்குப் பிறகு ரெட்மாண்ட் (வாஷிங்டன்) மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணையதள தேடுபொறியான “இண்டர்நெட் என்ஸ்புளோரர்” சேவை ஜுன் 15 முதல் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
- ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களைக் கொண்ட போகேஸ்வரா யானை கார்நாடகா மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியல் வயது முதிர்ச்சியின் காரணமாக உயிரிழந்தது.
- மூத்த எழுத்தாளர் கு.சின்னப்பாரதி காலமானார். அவருக்கு வயது 87. தாகம், சங்கம், சர்க்கரை, பவளாயி, தலைமுறை மாற்றம், சுரங்கம், பாலை நில ரோஜா ஆகிய ஏழு புதினங்களை எழுதியுள்ளார். இதில் சுரங்கம் நாவல் இவருக்கு பெரும் புகழைத் தேடித்தந்தது. சங்கம் நாவலுக்கு சென்னை இலக்கிய சிந்தனை அமைப்பின் விருது வழங்கப்பட்டது. செம்மலர் என்ற இடதுசாரி இலக்கிய மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
- சென்னை ஐஐடி வேதியியல் துறை பேராசிரியர் டி.பிரதீப் மற்றும் அவரது ஆராய்ச்சிக் குழுவுக்கு இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஜிஸ் “சர்வதேச தண்ணீர் விருது’’ அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருது சவூதி அரேபியாவின் இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஜிஸ் அவர்கள் பெயரில் ஆண்டுக்கு இரண்டு முறை வழங்கப்படுகிறது.
- மத்திய பிரதேசத்தில் அரிய வகை டைனோசர் முட்டைகளை தில்லி பலகலைக்கழக ஆய்வாளர்கள் அடங்கிய குழு கண்டெடுத்துள்ளது.
- சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் நடத்தும் இளையோருக்கான உலக சாமியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் குருநாயுடு சனாபதி தங்கம் வென்றார்.
- தமிழகத்தில் நடைபெறும் 61 வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் கிரேசினா ஜி.மெர்லி தங்கம் வென்றார்.
- ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் தலைவரான மிஷெல் பாச்லெட் மீண்டும் அப்பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இவருடைய 4 ஆண்டு பதவிக்காலம் வருகிற ஆக்ஸ்ட் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை, தினமணி