Lic Jeevan Anand Policy

Lic Jeevan Anand Policy

வாழும் பொழுதும், வாழ்க்கைக்கு பிறகும் என்ற வாசகம் நீங்கள் அதிகம் கேட்ட ஒன்றுதான். ஆம் எல்.ஐ.சியின் காப்பீட்டுத் திட்டங்களில் மிகவும் பிரபலமான அதே சமயத்தில் அதிக நபர்களால் காப்பீடு பெற்ற ஒரு திட்டம்தான் புதிய ஜுவன் ஆனந்த் காப்பீட்டுத் திட்டம் (Lic Jeevan Anand Policy ( 815) .  இத்திட்டம் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு ஆகிய இரண்டு அம்சத்தையும் ஒருங்கே பெற்ற சிறப்பான திட்டம் என்று குறிப்பிடலாம்.

இத்திட்டத்தில் 25 வயதுள்ள ஒரு நபர், மாதம் ரூபாய் 2408 வீதம், 35 ஆண்டுகள் டெர்ம், 10,00,000 ரூபாய் காப்பீட்டுத் தொகை என இத்திட்டத்தில் இணைந்தால், அவருடைய  60  ஆவது வயதில் பத்து லட்சம் ரூபாய் காப்பீட்டுத்தொகையும், தோராயமாக 17,15,000 அக்குமுலேட் போனஸ் தொகையும், இறுதி கூடுதல் போனஸ் தொகை தோராயமாக ரூபாய் 23,00,000 ம், மொத்தமாக 50,15,000 ரூபாய் பெறுவார். அவருடைய 35 ஆண்டுகால மொத்த பிரீமியம் தொகை ரூபாய் 10,12,778 ஆகும்.

ஒருவேளை பயனாளர் பாலிசி காலம் முடியும் முன்னரே இயற்கையாக மரணமடைய நேரிட்டால் 125 சதவிகிதம் உறுதியளிக்கப்பட்ட தொகை, இறப்பு வரை திரட்டப்பட்ட போனஸ் மற்றும் இறுதியாக வழங்கப்படும் போனஸ் (ஏதேனும் இருந்தால்) சேர்த்து பாலிசிதாரரால் பரிந்துரைக்கப்பட்ட நாமினி பெறுவார்.

இதுவே பாலிசிதாரர் விபத்தில் இறக்க நேரிட்டால் (விபத்து ரைடர் தேர்வு செய்யப்பட்டால்) விபத்துக் காப்பீட்டு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட பத்து லட்சம் ரூபாயும், அதற்கு இணையாக  கூடுதலாக பத்து லட்சம் சேர்த்து மொத்தமாக 20,00,000 ரூபாயை  நாமினி பெறுவார்.

எல்.ஐ.சி நிறுவனம் மத்திய அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். எல்.ஐ.சியினுடைய காப்பீட்டுத் திட்டங்களால் பலன் பெறுவோர் ஏராளம். தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தரும் காப்பீட்டுத் திட்டங்களில் பயனாளர்களுக்கு அவர்கள் உறுதியளித்தப்படி சேமிப்புத்தொகை, போனஸ் மற்றும் இதர பணப்பலன்கள் முழுமையாக கிடைக்குமென்று உறுதியாகக் குறிப்பிட முடியாது. ஆனால் எல்.ஐ.சி பொதுத்துறை நிறுவனம் மிகவும் நம்பகமானது. இந்தியாவில் காப்பீட்டுத் திட்டங்கள் என்றாலே கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம், அது எல்.ஐ.சிதான். உங்கள் சேமிப்பு மற்றும் குடும்ப பாதுகாப்புக்கிற்கு சிறந்த தேர்வு என்றால் அது மிகையாகாது.

நீங்கள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர விரும்பினால் புதிய ஜுவன் ஆனந்த் காப்பீட்டுத் திட்டம் Lic Jeevan Anand Policy ( 815)  உங்களுடைய சிறப்பான எதிர்கால வாழ்க்கைக்கும், வாழ்க்கைக்கு பிறகும் துணை நிற்கும்.

LIC Official Website

What is BYJU’S?

Please share with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top