பட்டு பூச்சி வாழ்க்கை சுழற்சி

Ads
Please share with your friends

பட்டு பூச்சி வாழ்க்கை சுழற்சி – யில் நான்கு நிலைகள் காணப்படுகின்றன. அவை : முட்டை, லார்வா, பியூபா மற்றும் பட்டுப்பூச்சி.

நன்கு வளர்ச்சியடைந்த பெண் பட்டுப்பூச்சிகள் குறிப்பிட்ட தாவரங்களின் இலைகளில் முட்டைகளை இடுகின்றன.

First Stage : முட்டை (Egg)

பட்டு பூச்சி வாழ்க்கை சுழற்சி
Ads

பெண் பட்டுப்பூச்சிகள் அதிக எண்ணிக்கையில் முட்டைகளை (Eggs) இடுகின்றன. இதனால் இவற்றிலிருந்து வெளிவரும் லார்வாக்களில் சிலவாவது கொன்றுண்ணிகளிடமிருந்து உயிர்பிழைக்கும். பட்டாம்பூச்சிகளின் முட்டைகள் மிகவும் சிறியவை. தட்டையாக அல்லது நீள்வட்ட வடிவமாக சுமார் 0.6 கிராம் எடை கொணடதாக காணப்படுகிறது. இந்த முட்டைப் பருவம் ஒரு சில தினங்கள் நீடிக்கும்.  முட்டையிலிருந்து லார்வாக்கள் எனப்படும் பட்டுப்புழுக்கள் வெளிவருகின்றன. முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாக்கள் அந்த இலைகளையே உணவாக எடுத்துக்கொள்கின்றன.

Second Stage : லார்வா (Larva)

பட்டு பூச்சி வாழ்க்கை சுழற்சி

பட்டுப்பூச்சிகளில் முட்டையின் அடுத்த நிலை லார்வா (Larva) ஆகும். இது பட்டுப்புழு அல்லது லார்வா என்று அழைக்கக்ப்படுகிறது. இது தலை, மார்பு மற்றும் வயிறு என மூன்று பகுதிகளைக் கொண்டது. இந்த லார்வாக்கள்இலைகளை உண்டு வேகமாக வளர ஆரம்பிக்கிறது. இந்த நேரத்தில் உண்ணப்படும் அதிகப்படியான உணவு அடுத்த நிலையான பியூபா நிலைக்கு தேவையான ஆற்றலை சேமிக்க உதவுகிறது. லார்வா நிலையில் அடுத்தடுத்து நான்கு அல்லது 5 முறை தோலுரித்தல் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த கட்டத்தில் பட்டுப்புழுக்கள் அவற்றின்ஆரம்ப அளவை விட 100 மடங்கு பெரிதாக வளர்ச்சியடைகிறது. இது ஒருசில வாரங்களில் 2 அங்குல நீளம் வரை வளரும். லார்வா நிலை அதன் இனத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. மல்பெரி பட்டுப்பூச்சி வகையில் லார்வா பருவம் 27 நாட்களாகும்.

Third Stage : பியூபா (Pupae)

பட்டு பூச்சி வாழ்க்கை சுழற்சி

பட்டுப்புழுக்கள் முழு வளர்ச்சியடைந்து சாப்பிடுவதை நிறுத்தும்போது, ​​​​அது பியூபா (Pupae) என்ற மூன்றாவது நிலைக்கு மாறும். பட்டாம்பூச்சிகளின் பியூபா கிரிசாலிஸ் (Chrysalis) என்றும் அழைக்கப்படுகிறது. பட்டுப்பூச்சிகளின் இனத்தைப் பொறுத்து, பியூபா ஒரு கிளையின் கீழ் இடைநிறுத்தப்பட்டு, இலைகளின் இடையே மறைந்திருக்கும். இந்த நிலை சில நேரங்களில் சில வாரங்கள், ஒரு மாதம் அல்லது அதற்கும் மேலாக நீடிக்கும். பட்டுப்பூச்சியின் இந்த அமைதியான பியூபா நிலையில் எதுவும் நடக்காதது போல் தோன்றலாம்.  ஆனால் உள்ளே அதன் கூட்டுக்குள் பெரிய மாற்றங்கள் நிகழ்கின்றன. பியூபாவின் உடலில் உள்ள சிறப்பு செல்கள் இப்போது வேகமாக வளர்ந்து முதிர்ச்சியடைந்த பட்டாம்பூச்சியாக மாற்றமடைவதற்கான வளர் உருமாற்றத்தை (Metamorphosis) அடைகின்றன. கூட்டுப்புழு பருவத்தில் பட்டாம்பூச்சியின் கண்கள், இறக்கைகள், கால்கள் மற்றும் ஆண்டனாக்கள் ஆகியவை வளர்ச்சி பெறுகின்றன. இது அடுத்த நிலைக்கு தயாரானவுடன் கூட்டிலிருந்து முதிர்ச்சியடைந்த பட்டுப்பூச்சியாக வெளிவருகிறது.

Forth Stage : பட்டுப்பூச்சி (Adult)

பட்டு பூச்சி வாழ்க்கை சுழற்சி

இது பட்டுப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சியில் இறுதி பருவம் ஆகும். முதிர்ச்சியடைந்த பட்டாம்பூச்சிகள் (Adult) லார்வா நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. இவற்றின் உடல் தலை, மார்பு மற்றும் வயிறு மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். பெரிய பட்டாம்பூச்சிகள் நீண்ட கால்கள், நீண்ட ஆண்டெனாக்கள் மற்றும் கூட்டு கண்கள் உள்ளன. பட்டுப்பூச்சிகளின் அவற்றின் பெரிய மற்றும் வண்ணமயமான இறக்கைகளைப் பயன்படுத்தி பறக்கின்றன. ஆண் பட்டுப்பூச்சிகள் பெண் பட்டுப்பூச்சிகளை விட பெரியவை. பட்டுப்பூச்சிகள் உடலில் உள்ள காற்றுத்துளைகள் மூலம் சுவாசிக்கின்றன. முதிர்ச்சியடைந்த பட்டுப்பூச்சிகளின் வேலை இனச்சேர்க்கையில் ஈடுபடுவதும் மற்றும் முட்டைகளை இடுவதும் ஆகும். பட்டாம்பூச்சிகள் பூக்களில் உள்ள தேனை உண்பதன் மூலம் ஆற்றலைப் பெறுகின்றன. பெரும்பாலான முதிர்ச்சியடைந்த பட்டாம்பூச்சிகள் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் மட்டுமே உயிர் வாழ்கின்றன, ஆனால் சில பட்டாம்பூச்சி இனங்கள் குளிர்காலத்தில் உறக்கநிலைக்கு செல்கின்றன. மேலும் இவை பல மாதங்கள் வரை உயிர்வாழ்கின்றன.

Ads

பட்டு பூச்சி வாழ்க்கை சுழற்சி காலநிலை மற்றும் அவற்றின் இனைத்தைப் பொறுத்து 45 முதல் 55 நாட்களில் முடிவடைகிறது.

Butterfly Life Cycle

Monarch butterfly life cycle

Leave a Reply

error: Content is protected !!